"ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை குடிக்கலாம்" - அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை அருந்துவதற்கு எந்த கட்டுப்படும் இல்லை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
08:36 AM Mar 22, 2025 IST | Web Editor
Advertisement
மாநிலங்களவைவில் நேற்று (மார்ச் 21) கேள்வி நேரத்தின்போது, மதிமுக எம்.பி. வைகோ, திமுக எம்.பி. சண்முகம் ஆகியோர், ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் பணிக்கு வரும்போதும், பணியின்போதும் குளிர்பானங்கள், பழங்கள், இருமல் மருந்து, இளநீர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
Advertisement
வெயில் நேரத்தில் என்ஜின் பெட்டி சூடாக இருக்கும் நிலையில், குளிர்பானங்கள் குடிக்க தடை விதிப்பது மனிதத்தன்மையற்ற செயல் என்றும் கூறினர்.
அப்போது கேள்விக்கு பதில் அளித்த ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ரயில் ஓட்டுநர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை. சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே திருத்தப்பட்டு விட்டதாக கூறினார்.