For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை அண்​ணாமலை​யார் கோயி​லில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
06:31 PM Dec 03, 2025 IST | Web Editor
திருவண்ணாமலை அண்​ணாமலை​யார் கோயி​லில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் –  லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம்
Advertisement

திருவண்ணாமலை அண்​ணாமலை​யார் கோயி​லில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று (டிச.3) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது விண்ணைப் பிளக்கும் அரோகரா முழக்கங்களுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. நாட்டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து வந்திருந்த லட்​ச கணக்கான பக்​தர்​கள் மகா தீபத்தை தரிசித்தனர்.

Advertisement

5 அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்​ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்​தக் கொப்​பரையானது நேற்று அதி​காலை கோயி​லில் சிறப்பு பூஜைசெய்​யப்​பட்​டு, பின்​னர் மலை உச்​சிக்கு கொண்டுச் செல்​லப்​பட்​டது. மேலும், தீபம் ஏற்​று​வதற்கு ஆயிரம் மீட்​டர் அளவிலான திரியும், தீபம் எரிவதற்கு 3,000 கிலோ நெய்யும் பயன்​படுத்​தப்​பட்டது.  இவையனைத்தும் இன்று அதி​காலை மலை உச்​சிக்கு கொண்டு வரப்பட்டது.

திரு​வண்​ணா​மலை அண்​ணாமலை​யார் கோயி​லில் கடந்த 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் கார்த்​திகை தீபத் திரு​விழா தொடங்​கியது. கடந்த 9 நாட்களாக காலை​யில் விநாயகர், சந்​திரசேகரரும், இரவு பஞ்ச மூர்த்​தி​களும் பல்​வேறு வாக​னங்​களி​லும் எழுந்​தருளி மாட வீதி​களில் பவனி வந்​தனர். விழா​வின் 10-ம் நாளானஅண்​ணா​மலை​யார் கோ​யில் சுவாமி சந்​நி​தி​யில் இன்று அதி​காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்​றப்​பட்​டது.

Tags :
Advertisement