For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவாளி ரயில் முன்பதிவு - ரிட்டர்ன் டிக்கெட்டும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!

09:45 AM Jul 04, 2024 IST | Web Editor
தீபாவாளி ரயில் முன்பதிவு   ரிட்டர்ன் டிக்கெட்டும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன
Advertisement

தீபாவாளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரிட்டர் டிக்கெட்டுக்கான முன்பதிவு  தொடங்கிய நிலையில்  சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Advertisement

முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு பெருநகரத்திலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தைத்தான் தேர்வு செய்கின்றனர். ரயிலில் செல்லும் பயணிகள் தாங்கள் செல்லும் தொடர் வண்டிக்கான முன்பதிவை 180நாட்களுக்கு முன் எடுக்க ஏதுவாக ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளி போன்ற பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லவும், மீண்டும் அங்கிருந்து சென்னை திரும்பவும் என ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் முன்பதிவு செய்து பயணிப்பர். சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்துநகர், அனந்தபுரி, மலைக்கோட்டை உள்ளிட்ட ரயில்களிலும் கோவைக்கு செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு விரைவாக முடிவடைவது வழக்கம்.

அதன்படி தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 30 மற்றும் 31ம் தேதிகளில் டிக்கெட் முன்பதிவு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முடித்து நவம்பர் ஒன்றாம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று இரவு முதல் இருந்து ஒரு சிலரும், அதிகாலையில் இருந்தும் பொதுமக்கள் காத்திருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.

அதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் பகல் நேர ரயில்களான வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய ரயில்களிலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்துவிட்டன. ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் நிலையில், முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்தன. ஒரு சில ரயில்களில் ஏ சி பெட்டிகளில் மட்டும் இடமும் மற்றவற்றில் காத்திருப்போர் பட்டியலில் கூட இல்லாத அளவுக்கு முன்பதிவுகள் நடத்துள்ளன.

சென்னை எழும்பூர் ரயில்வே நிலைய முன்பதிவு கவுண்டர்களில் காலை 7 மணி முதலே அதிக அளவு மக்கள் வருகை தந்து தங்களுக்கான விண்ணப்ப படிவங்களை நிறைவு செய்து முன்பதிவு செய்தனர்.  பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பல மணி நேரம் டிக்கெட் கிடைக்குமா? கிடைக்காதா? என்று தெரியாமல் காத்திருந்து முன்பதிவு செய்வது மிகவும் சிரமாக இருப்பதாகவும், கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகத்திற்க்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement