For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!

09:21 PM May 23, 2024 IST | Web Editor
அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்
Advertisement

விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அரசு போக்குவரத்து பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

Advertisement

போக்குவரத்து கழக பேருந்துகளை தவறான முறையில் இயங்கினால் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து
இன்று 22.05.2024 ம் தேதி காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த அறிக்கையின் படி போக்குவரத்து பேருந்துகள் அதிகப்படியான புகையினை வெளியேற்றுவதும் , ஓட்டுநர் நடத்துனர் சரியான யூனிபார்ம் அணியாமல் பணி செய்வதும், அதிக வேகத்தில் கட்டுப்பாட்டை மீறி வாகனத்தை இயக்குவதும் வாடிக்கையாக உள்ளது.

எனவே அனைத்து பேருந்துகளுக்கும் சட்டம் சமம் என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழக வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்து அதன் வாராந்திர அறிக்கையை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி மறைமலைநகர், வண்டலூர், தாம்பரம் போக்குவரத்து போலீசார் சுமார் 5 பேருந்துகளுக்கு தலா ஆயிரம் அபாரதம் விதித்தனர். காவலர் ஒருவர் போக்குவரத்து கழக பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததை தொடர்ந்து வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு விதிகளை மீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து 5பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement