மாஞ்சோலை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 3 மாதங்களுக்கு பிறகு வனத்துறை அனுமதி!
குட்டி ஊட்டி என அழைக்கப்படும் மாஞ்சோலை மலைப்பகுதியில் சுற்றுலாவிற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. இந்த மாஞ்சோலைக்கு பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களாக இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
மணிமுத்தாறு தொடங்கி மாஞ்சோலை காக்காச்சி புல்வெளி பகுதி வரை மட்டுமே சுற்றுலா செல்ல அனுமதி என்றும் மணிமுத்தாறு அணையில் குளிக்கவும், பஸ்களில் பயணிகள் செல்லவும் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். அதற்கு மாறாக வாகனங்களில் மட்டும் செல்லலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நேரடியாக அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என்றும் மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடியிலேயே அனுமதி பெற்று செல்லலாம் எனவும் பல அறிவிப்புகளை வனத்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.