For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தான் தோண்டிய குழியில் தானே சிக்கிய சுற்றுலா பயணி - பல மணி நேரம் நடந்த மீட்பு போராட்டம்!

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜென்சன் என்பவர் தான் தோண்டிய 8 அடி குழியில் சிக்கி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.
07:10 PM May 20, 2025 IST | Web Editor
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜென்சன் என்பவர் தான் தோண்டிய 8 அடி குழியில் சிக்கி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.
தான் தோண்டிய குழியில் தானே சிக்கிய சுற்றுலா பயணி   பல மணி நேரம் நடந்த மீட்பு போராட்டம்
Advertisement

பிரேசிலில் உள்ள கோபகபனா கடற்கரைக்கு பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜென்சன் என்பவர் சுற்றுலா சென்றார். அங்கு, தான் தோண்டிய 8 அடி குழியில் அவரே சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழியில் சிக்கிக்கொண்ட அவர் கடற்கரை வழியாக செல்பவர்களிடம் தன்னை மீட்குமாறு உதவி கேட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஜென்சனைச் சுற்றி பள்ளம் பறித்தனர்.

Advertisement

சிலர் மரத்துண்டுகளையும் கயிறுகளையும் வைத்து அவரை மீட்க முயற்சி செய்தனர். இதனிடையே ஜென்சன் குளியில் இருந்தபடியே மதுபானம் அருந்தினார்.  தொடர்ந்து மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜென்சன் பத்திரமாக குழியில் இருந்து மீட்கப்பாட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ நான் திரைப்படத்தில் வருவதுபோல் புதைக்குழி தோண்ட நினைத்து குழியில் சிக்கிக்கொண்டேன். நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக, என்னைக் காப்பாற்ற நல்லவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி”  என்று உயிர் தப்பித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Tags :
Advertisement