மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என 45 பேர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். இவர்களின் பேருந்து எகோ பாயின்ட் சாலை வளைவில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, முன்னே சென்ற வாகனத்தை முந்திசெல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படியுங்கள் : ‘ஒரு கொலைக்கு 8 Suspect… திணறும் போலீஸ்’ – விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியானது ‘சுழல் 2’ டிரெய்லர்!
இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.