ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் - நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தாலிக்கால் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மகன்கள் அமுதன்(10), சுதன்(8) மற்றும் அவர்களது நண்பரான இளஞ்செழியன்(10) ஆகிய மூவரும் அதே பகுதியில் உள்ள ஏரியல் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது மூன்று பேரும் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதனால் எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பின் சிறுவர்கள் இல்லாததை அறிந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மூன்று சிறுவர்களையும் சடலமாக மீட்டனர்.
இதனை தொடர்ந்து மூன்று பேரின் உடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.