Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"காங்கிரஸுக்கு இது தான் கடைசி தேர்தல்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

01:48 PM Mar 08, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Advertisement

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.  தேர்தல் வாக்குறுதி எதும் நிறைவேற்றாமல் இருக்கும் திமுக,  சிலிண்டர் விலை குறைப்பு குறித்து பேசக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. போதை பொருள் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்தவர். இந்த விவகாரம் குறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன்?

இதையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு முதல் கத்தரிக்காய் பஜ்ஜி வரை பார்த்தாச்சு…இது என்ன காஜீ கத்லி பஜ்ஜி?

கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக.  மீண்டும் பாஜக ஆட்சி அமையும். சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை பாஜக ஆட்சி கண்டிப்பாக செய்யும்.  கோவையில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விருப்பபட்டாலும், ஒ ரு மாநில தலைவராக தனக்கு பல்வேறு கடைமைகள் இருக்கிறது.

2026 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த நாடாளுமன்ற தேர்தல் அமையும். தமிழ்நாட்டில் திமுகவிற்க்கு 90 சதவீதம் பணம்,  தேர்தல் பத்திரம் மூலமாக வந்துள்ளது. இந்தியாவிலே ஒரு மாநில கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அதிக பணம் வந்துள்ளது என்றால் அது திமுகவிற்க்கு தான்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags :
AnnamalaiBJPCongressElection2024Parlimentary Election
Advertisement
Next Article