Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கையால் ஒன்றிய கூட்டணி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

07:04 PM Apr 05, 2024 IST | Web Editor
Advertisement

“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கையால் ஒன்றிய கூட்டணி” என காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

டெல்லியில் இன்று (ஏப். 5) காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி,  கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

“காலத்தை கை வெல்லும்” என்ற லட்சினையுடன் நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டது. 48 பக்க அறிக்கையின் முகப்பில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் படம் இடம் பெற்றிருந்தது. அதன் கீழ் பகுதியில், பொதுமக்கள் மத்தியில் ராகுல்காந்தி நடைபயணமாக சென்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த தேர்தல் அறிக்கையில்,  விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, அத்துடன் காங்கிரஸ் கட்சியின் அறிக்கைகள் சில அடங்கிய படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

அதிமுக அடகு வைத்த, பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்! நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ்  வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை. அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கையால் ஒன்றிய கூட்டணி!” என பதிவிட்டுள்ளார்.

Tags :
CMO TamilNaduCongressElection2024Elections2024INCINC IndiaINDIA AllianceLokSabha Election2024manifestoMK StalinNews7Tamilnews7TamilUpdatesRahul gandhiTN GovtVote 4 INDIA
Advertisement
Next Article