Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தலித், பழங்குடியினருக்கு எதிரானது பாஜக ஆட்சி - மல்லிகார்ஜுன கார்கே

12:26 PM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது பாஜகவின் பிரித்தாளும் கொள்கை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, "தேசிய குற்றவியல் பதிவுகள் அமைப்பின் அறிக்கை புள்ளிவிவரங்களை மட்டும் காட்டவில்லை,  பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வு பாதுகாப்பின்றி இருப்பதையும் காட்டுகிறது.  அநீதி, கொடுமைகள் மற்றும் அடக்குமுறை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செய்துவந்த சதித் திட்ட கொள்கையினால் ஏற்பட்டவை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை: ரூ.72 லட்சம் செலுத்திய பக்தர்கள்!

மேலும், தலித் மற்றும் பழங்குடியின மக்கள் பாஜக- ஆர்எஸ்எஸ் கட்சிகளின் அடக்குமுறையைத் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  கார்கே பகிர்ந்துள்ள பதிவில்,  2013-க்குப் பிறகு தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 46.11 சதவீத அளவிற்கும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 48.15 சதவீதம் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags :
BJPCongressmallikarjuna karkenews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article