“சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்” - ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!
உலக பிராமிணர்கள் நல சங்கத்தின் 11ஆம் ஆண்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், திரைப்பட இயக்குனர் மோகன் ஜி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய ஹெச்.ராஜா,
“தமிழில் பாத்திரம் அறிந்து பிச்சை எடு என்பார்கள். அதுக்கு அர்த்தம் தகுதியானவர்களுக்கு உதவி செய்வது. இன்றைக்கு பிராமின் என்பது ஜாதியாக உள்ளது. இதற்கு முன்பு வர்ணமாக இருந்தது வர்ணம் என்று சொன்னதால் உடனே கலர் கொடுத்து விடுவார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் 150 வருடங்களாக பிராமணர்கள் எதிர்ப்பு இருந்து வருகிறது. இது வேறு எங்கும் கிடையாது. இது ஏன் நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பதை நாம் அறிய வேண்டும்.
கால்டுவெல் முதலில் நாடர்களை தான் வந்தேறிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடார் மக்களை தமிழர்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி
பகுதியில் அவர் மதமாற்றம் செய்ய முயன்ற பொழுது அந்த மக்கள் மறுத்ததால் அவர்களை இப்படி கூறியுள்ளார். நாடார்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். ஒரு காலத்தில் இலங்கை முதல் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் என பாரத தேசம் விரிந்திருந்தது. நாடார்கள் தமிழர்கள் என நீதிமன்றத்தில் ஏறி வாதாடியவர்கள் பிராமிணர்கள். இப்படி ஒற்றுமையோடு இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தில் புதுசு புதுசாக கரடியை விடுகிறார்கள். பிராமணர்களுக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். என்னையே பீகாரி என்கிறார்கள்.
திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும்... இனத்தை அல்ல. பஞ்சத் திராவிடத்தில்
இருக்கும் குஜராத்தும் திராவிட நாடுதான். அப்படி பார்த்தால் நம் நாட்டின்
பிரதமர் மோடியும் திராவிடம் தான். *பிரதமர் மோடி அசல் திராவிடர்*. ஆரியம்
குணத்தை குறிக்கும். நாம் ராம்லீலா கொண்டாடினால் இவர்கள் இராவண லீலா
கொண்டாடுகிறார்கள்... நாம் வாயால் சாப்பிடுகிறோம் இவர்கள் என்ன செய்வார்கள்?.
திருவண்ணாமலையில் கரிகாலன் என்ற ஒருவர் இருக்கிறார். திருமாவளவன் என்ன சொன்னாலும் இவர் சர்வநாசம் செய்து விடுவார். ஆனால் தற்பொழுது இவர் சாமியாராக இருக்கிறார். திருமாவளவன் சமூகத்திற்காக அரசியலுக்கு வந்தார் என்பதால் அவருடன் இருந்தேன்... ஆனால் அரசியலுக்கு வந்து பிழைப்பு நடத்த ஆரம்பித்து விட்டதால் நான் சந்நியாசி ஆகி விட்டேன் கரிகாலன் கூறியுள்ளார். செருப்பு தைப்பது முதல் அனைத்து தொழில்களையும் ஒருவனே செய்வதால் வேலையில்லா திண்டாட்டம் உருவாகிவிட்டதாக திருமாவளவனின் அடியாளாக இருந்த கரிகாலன் கூறியிருக்கிறார்.
சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம். திருமாவளவனும், சுபா வீரபாண்டியனும் தான். சாதிய ஆணவக் கொலைகளை சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தூண்டி விடுகின்றனர். திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் பிறக்கும் முன் சாதிமறுப்பு திருமணங்கள் நடந்தன. இவர்கள் பிறக்கும் முன் யாரும் அரிவாள் எடுக்கவில்லை. இவர்கள் பிறந்த பின்புதான் அரிவாள் எடுக்கிறார்கள்” என சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.