For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்" - நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
12:45 PM Aug 20, 2025 IST | Web Editor
திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
 திருமாவளவன் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கிறார்    நயினார் நாகேந்திரன் பேட்டி
Advertisement

நெல்லை பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், "இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ஒண்டிவீரனை போற்றுவதில் பெருமை.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக உழைத்த தியாகிகளையும் திறமையுள்ள மனிதர்களை தேர்ந்தெடுத்து மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றி வணங்குகிறார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அந்த கட்சியின் பொது செயலாளராக இருந்தாலும் எல்லா நேரங்களிலும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் எந்த கட்சியில் இருந்தாலும் அவரது தமிழ் பற்றுக்கு நான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.

தமிழுக்காக வாழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சி.பிராதாகிருஷ்ணனை ஆதரித்தால் உண்மையிலேயே அவர் கூறுவது உண்மை என்று தெரியவரும். திருமாவளவன் எனது நண்பர். அவர் கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

திமுகவினர் தேர்தல் நேரங்களில் வெற்றி பெறுவதற்காக ஏராளமான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து அரசியல் எதுவும் பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, நான் மாநில தலைவராக வந்ததும் அவரைப் பார்க்க வேண்டியது. அதனால் அவரை தற்போது சந்தித்திருக்கிறேன். பாஜக என்றால் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பழைய பிஜேபி அல்ல புது வேகம் எடுக்கும் பிஜேபி.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, அதைப் பற்றி எனக்கு தெரியவில்லை. நடிகர் விஜய் மாநாட்டில் எம்ஜிஆர் படங்களை பயன்படுத்தி வருகிறார் நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது அதிமுகவிற்கு தான் முழு உரிமை உள்ளது. நான் சிறுவயதில் எம்ஜிஆர் மன்றத்திலிருந்து வந்தவன். இன்னும் எனது தொலைபேசியில் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை ஊர் அறிந்த உண்மை என்ற பாடல் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement