"திருமாவளவன் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்" - நயினார் நாகேந்திரன்!
பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருமாவளவன் உங்கள் கூட்டணிக்கு வருவாரா அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, திருமாவளவன் ஒரு கூட்டணிகுள் இருக்கும் வரை அது குறித்து நாம் பேசக்கூடாது. திருமாவளவன் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர்.
நட்பு என்பது வேறு, அரசியல் களம் என்பது வேறு. ஒரு கூட்டணியில் இருக்கும் போது அவரை வாவென்று அழைப்பது அது நாகரீகமான செயலாக இருக்காது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இயற்கையாகவே தமிழ்நாட்டின் மீதும், தமிழ் பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி மாண்பு இதையெல்லாம் வேறு எல்லா இடத்திலும் பேசிக் பெரிதாக எடுத்து நடத்தி வருகிறார்.
இதெல்லாம் ஓட்டுக்காகவோ, ஒப்பனைக்காகவோ அல்ல, இயற்கையாகவே ஐநா சபைக்கு சென்றால் அங்கும் திருக்குறள் குறித்து பேசுகிறார். திருக்குறள் 35 மொழிகளில் மொழிபெயர்ப்புக்கு செய்திருக்கிறார். நிறைய விஷயங்களில் தமிழ்நாட்டின் மீது அக்கரையாக இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டில் ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்.
நான் தான் அது குறித்து முதன் முதலில் பேசினேன். ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சட்டம் இயற்ற தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை இன்று சரியான முறையில் இயங்கவில்லை, தமிழ்நாடு காவல்துறை ஒட்டுமொத்தமாக செயல் இழந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.