For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Thiruchendur | உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் துவக்கம்!

11:09 AM Oct 03, 2024 IST | Web Editor
 thiruchendur   உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் துவக்கம்
Advertisement

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

Advertisement

உலக புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தப்படியாக திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி தினங்களே இங்கு தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

இந்த தசரா திருவிழா 12 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. திருவிழா  நாட்களில் தினமும் அபிசேகம், இரவு அம்பாள் வீதி உலா நடைபெறும். மேலும் வருகிற 12-ம் தேதி சிகர நிகழ்ச்சியான மஹிசா சூரசம்காரம் நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு 41,  21,  11 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டி இன்று முதல் வேடமணிய தொடங்குவார்கள்.

பக்தர்கள் காளிவேடம், அம்மன், குரங்கு , குறவன் குறத்தி, உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம் பெற்று கோயிலில் காணிக்காயாக செலுத்துவார்கள். கொடியேற்றத்தை முன்னிட்டு யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிசேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி பக்தி கோசம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags :
Advertisement