For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" - செல்வப்பெருந்தகை பேட்டி!

மத்திய அமைச்சர் அமித்ஷா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
12:26 PM Jan 30, 2025 IST | Web Editor
 அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்    செல்வப்பெருந்தகை பேட்டி
Advertisement

காந்தியடிகளின் 78வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் திருவருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

Advertisement

"மத்திய அமைச்சர் அமித்ஷா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அரசுக்கு தொடர்ந்து ஒரு கோரிக்கை வைக்கிறோம். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, இரும்பு கரம்
போன்று பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இரவு நேரங்களில் கூட பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு பாதுகாப்பான முறையில் தனது வீடுகளுக்கு செல்வதே சுதந்திரம், பெண்களை காப்பாற்றுவது குறித்து கடமையும் பொறுப்பும் காவல்துறைக்கு உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் எல்லோரும் அமைதியாக வாழ்கிற இடம் தமிழ்நாடு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். சென்னையில் பெண்களுக்கு நடந்த இந்த சம்பவம் அநாகரீகமான செயல், காங்கிரஸ் கமிட்டி இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைகள் அனைவரும் எங்களுடைய பிள்ளைகள், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதுதான் எங்களுடைய நோக்கம்.

சென்னையில் நடைபெற்ற சம்பவம் பொருத்தவரை அருவெறுப்பான சம்பவம், தலைகுனியக்கூடிய சம்பவம் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறான சம்பவத்தில் ஈடுபடும் ஒருவரால் தமிழ்நாடு என்ற ஒட்டு மொத்த பேருக்கும் அவமானமாக உள்ளது. இனி வரும் காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் விதமாக, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் பின்னர் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது.

பாலியல் வன்கொடுமை, முறைகேடுகளில் ஈடுபட்டால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சென்னை காவல் ஆணையாளர்கள் குற்றவாளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்ற நிலையை ஆணையர் உருவாக்க வேண்டும், இதற்கு முதலமைச்சர் ஊக்கப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement