For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை" - வானதி சீனிவாசன்

01:53 PM Feb 20, 2024 IST | Web Editor
 விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை    வானதி சீனிவாசன்
Advertisement

"லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற விவசாயிகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை" என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  சட்டப்பேரவை கூட்டம்  நேற்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார்.  

இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன் பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். கிட்டத்தட்ட 144 பக்கம் நிதி நிலை அறிக்கையினை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.  காலை 10 மணியளவில் உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என்ற திருக்குறளுடன் வேளாண்  பட்ஜெட் உரையை துவங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பின்னஎ செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது..

” இன்றைய விவசாயத்துறை பட்ஜெட்,  தனியாக விவசாயிகளுக்கு என்று தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டம் எதுவும் இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களாக இருக்கக்கூடிய திட்டங்களை எடுத்து போட்டு இந்த நிதிநிலை அறிக்கையில் 60 முதல் 70 சதவிகிதம் மத்திய அரசு நிதியுடன் இணைந்துள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து விட்டு  தனியான பட்ஜெட்டை கொடுப்பது போல் கொடுத்திருக்கிறார்கள்.  தமிழ்நாடு போல் அதிகம் நகர்ப்புறமயமாக்கல் உள்ள மாநிலத்தில் நமக்கு இருக்கும் சவால் விவசாய நிலப்பரப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.  தொழிலாளர்கள் விவசாயத்திலிருந்து விலகி வருகிறார்கள்.  இதனால் லாபம் இல்லாத தொழிலாக விவசாயம் இருந்து வருவது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

மத்திய அரசு தமிழ்நாட்டை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கனவே அறிவித்துள்ளது.  விவசாயம் சார்ந்த தொழில்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொண்டு வரும் வகையிலும் இந்த பட்ஜெட் எதுவும் இல்லை.  சிவகங்கை,  புதுக்கோட்டை,  நாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் திரும்பவும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நிலை தான் வரும்.

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் லாபத்திற்கு ஓட்ட முடியாத நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கரும்பை அறுவடை செய்து கொடுத்து பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.  ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பயிர்கள் உள்ளன ஒரு கிராமம் ஒரு பயிர் என்று திட்டம் அறிவித்துள்ளார்கள்.  இதனை போன முறையும் அறிவித்தார்கள் எத்தனை வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கினார்கள்.  இதற்கு தீர்வு கண்டுபிடித்து விவசாயிகளுக்கு கொடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை.

நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்பது,  கேரள மக்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். வெளிநாட்டு எண்ணெய்க்கு மானியம் கொடுத்து இறக்குமதி செய்கிறார்கள்.  கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்ட விலையில் இருந்து அதே விலைக்கு கூட மத்திய அரசு கொடுக்க வாய்ப்பு உள்ளது.  இன்றைய முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் கொடுக்க முயற்சி செய்வதாக தெரிவித்து இருந்தார்,  அதனை செய்ய வேண்டும்” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement