“தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிர்ப்பு அலை என்பது கொஞ்சம் கூட கிடையாது” - அமைச்சர் ரகுபதி!
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“முதலமைச்சர் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எதாவது பலன் கிடைத்திருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி பழனிசாமி கையில் இல்லை என இரண்டு நாட்களுக்கு முன் கூறினேன். ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள், உதய சூரியனுக்கு வாக்களித்திருக்கின்றனர். கருத்துக்கணிப்பு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் 39 தொகுதிகளிலும் திமுகதான் வெல்லும் என கூறியுள்ளது.
எதிர்ப்பு அலை என்பது கொஞ்சம் கூட கிடையாது. தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். விரைவில் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி கலகலத்து இருக்கிறது. எல்லா கட்சியும் சேர்த்து 21 சதவீத வாக்கு வாங்கியுள்ளனர். கருத்துக்கணிப்புகளை குறிப்பிட்ட அளவு ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிரிகளே இல்லை என்று நாங்கள் என்றுமே சொன்னதில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் சென்னார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் எதிர்க்கட்சி. அண்ணாமலை அறிவாலயத்தில் உள்ள செங்கலை கூட எடுக்க முடியாது. செங்கோட்டையன் அதிருப்தியில் உள்ளார் என்று கூறினோம். ஆனால் திமுகவில் இணைவார் என்று கூறவில்லை. முடிந்தவரை இந்தாண்டுக்குள் எல்லா கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார்.
பிரசாந்த் கிஷோர் தவெகவிற்கு சென்றதால் ஒரு மாற்றமும் இருக்காது. ஏமாற்றம் தான் இருக்கும்” என தெரிவித்தார்.