”தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை” -பிரேமலதா விஜயகாந்த்!
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்பரமாக ஈடுபாடுள்ளன. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஓரணியில் தமிழ் நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடத்திவருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பயணம் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொடுள்ளார்.
அந்த வகையில் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தொண்டர்களை சந்தித்தார். இந்த நிகழ்சியில் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,”தமிழகத்தில் வியாபாரிகளுக்கு, மீனவர்களுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை. பெண்கள் தனியாக சாலைகளில் செல்ல முடியவில்லை வகை பறிப்பு நடக்கிறது. சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதை சரி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
அடுத்ததாக செய்தியாளர்கள் ஆணவ படுகொலைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு படிலளித்த பிரேமலதா விஜயகாந்த் ”சாதி வெறி தான் ஆணவ படுகொலைக்கு காரணம். சாதி வெறி உள்ளவரை இது தொடரும். எத்தனை பெரியார்,பாரதியார் வந்தாலும் இது பற்றி பேசி இருந்தாலும் சாதி வெறி ஒழிந்தால் தான் இந்த நிலைமை மாறும். இது தனிநபர் பிரச்சனையோ அரசாங்க பிரச்சினை அல்ல. அனைத்து தரப்பு மக்களும் மனநிலை மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.