”அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை” - அண்ணாமலை பேட்டி!
நாமக்கல் பாஜக அலுவலகத்தில் ஆடிட்டர் ராமேஷ் அவர்களின் நினைவு அஞ்சலி பாஜக நிர்வாகிகள் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.இதன்பின் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில்,
“நாமக்கம் மாவட்டத்தில் சாதாரண மக்களை ஏமாற்றி சிறுநீரகத்
திருட்டு விற்பனையில் ஈடுப்பட்டு வருவதாக தெரிகிறது. தமிழக அரசு சிறப்பு
புலனாய்வு குழு அமைத்து முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.
மயிலாடுதுறை டி.எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள்
எழுப்பிய கேள்விக்கு, ”ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள்
துன்புறுத்தியதால் தான் பத்திரிக்கையாளர்களை சந்திக்க தள்ளப்பட்டுள்ளேன் எனடி.எஸ்.பி தெரிவித்துள்ளார். இதுவிதிமுறைகளுக்கு புறம்பானது என்றாலும் அவருடைய மனக்குமுறலை தெரிவிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார். தமிழகத்தில் நேர்மையாக இருக்ககூடிய அரசு அதிகாரி சீருடையில் சாலையில் நடந்து சென்று அவர்களது அலுவலகத்திற்கு சென்ற அன்றைக்கே காவல்துறை நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சராக இருக்கும் முதலமைச்சர் நேரடியாக தலையீட்டு டி.எஸ்.பிக்கு நீதியும், நியாயமும் வழங்க வேண்டும்” என்று பதிலளித்தார்
மேலும் அவர், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும் இல்லை. அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்கும் முடிவே இறுதியானது. 2026 சட்டபேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறியது 2026 தேர்தலுக்கு பிறகு
இருக்கலாம்” என்றார்.