For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜகவுடன் எந்த முரண்பாடும் இல்லை! ஆனால் எனது ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கே!” - கேரளாவில் ‘மண்சட்டி சமரம்’ செய்த மரியகுட்டி திட்டவட்டம்!

04:15 PM Apr 26, 2024 IST | Web Editor
“பாஜகவுடன் எந்த முரண்பாடும் இல்லை  ஆனால் எனது ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கே ”    கேரளாவில் ‘மண்சட்டி சமரம்’ செய்த மரியகுட்டி திட்டவட்டம்
Advertisement

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான முகமாக பார்க்கப்படும் மரியகுட்டி,  தனக்கு பாஜகவிடன் எந்த முரண்பாடும் இல்லை என்றாலும் தனது ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கே என அறிவித்துள்ளார். 

Advertisement

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அடிமாலிக்கு அருகில் உள்ள இருநூறேக்கர் பொன்னொடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மரியகுட்டி.  இவருக்கு நான்கு பெண் குழந்தைகள்.  36 வயதில் கைவிட்டுச் சென்ற கணவர்,  பின்னர் இறந்துவிட்டார்.  வருமானம் ஈட்டி கவனித்துக்கொள்ள கணவனோ,  மகனோ இல்லாத நிலையில் கடந்த 45 ஆண்டுகளாக கைம்பெண் பென்ஷன் பெற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.  மாதம் 1,600 ரூபாய் பென்ஷன் பெற்றுவந்தார்.

இந்த நிலையில், திடீரென மரியகுட்டிக்கு பென்ஷன் நிறுத்தப்பட்டது.  அதுபற்றி அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று கேட்டுள்ளார்.  அதற்கு, `நீங்கள் உம்மன்சாண்டியிடம் கேளுங்கள்,  நரேந்திரமோடியிடம் கேளுங்கள்' எனச் சில அதிகாரிகள் கிண்டலாகக் கூறியதாகத் தெரிகிறது.  நான்கு மாதங்களுக்கும் மேலாக பென்ஷன் கிடைக்காததை அடுத்து தனி ஒருத்தியாகப் போராடத் தயாரானார் மரியகுட்டி.  அதற்காக மண்சட்டியில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தொடங்கினார். `மண்சட்டி சமரம்’ என கேரளா முழுவதும் மரியகுட்டியின் போராட்டம் பிரபலம் ஆனது. இரண்டு வருடங்களாக முதியோர் பென்ஷன் கிடைக்காத 80 வயதான அன்னா யோசேப்பும் அவருடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

இறுதியாக,  மண்சட்டி சமரம் செய்த மரியகுட்டியின் மன உறுதிக்கு முன் அரசு பணிந்தது. அடிமாலி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மரியகுட்டி வீட்டுக்குச் சென்று பென்ஷன் தொகையான 1,600 ரூபாயை நேரடியாக வழங்கினர்.

இந்த மண்சட்டி சமரம் வாயிலாக கேரளா முழுக்க பிரபலமான மரியகுட்டி,  பினராயி விஜயன் அரசுக்கு எதிரான முகமாக உருவெடுத்தார்.

இந்நிலையில்,  திருச்சூரில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் மரியகுட்டி பங்கேற்றது அனைவரையும் வியப்படைய வைத்தது.  இதனை தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக மரியகுட்டியை களம் இறக்க அம்மாநில பாஜகவினர் முயற்சித்தனர்.  இந்த தகவலை உறுதி செய்த மரியகுட்டி,  பாஜகவுடன் தனக்கு எந்த முரணும் இல்லை என்றும் ஆனால் தனது ஓட்டு காங்கிரஸுக்குதான் எனவும் உறுதிபட கூறியுள்ளார்.

அதோடு, "ஒரு விழாவில் கலந்துகொண்டதால் நான் பாஜக ஆதரவாளர் என்று அர்த்தமல்ல. எனக்கு பாஜகவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை.  எனது வாழ்க்கை உள்பட பலரது வாழ்க்கையை அவல நிலைக்கு தள்ளிய பினராயி தலைமையிலான அரசின் மீது மட்டுமே எனக்கு வெறுப்பு.  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவாலை விட வஞ்சகரான பினராயி, இதுவரை தப்பித்துக்கொண்டிருக்கிறார்.

வண்டிப்பெரியார் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பான போராட்டத்தில் கலந்து கொண்ட மாரியக்குட்டி,  சிபிஎம் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்குகளை சுட்டிக்காட்டி, “குழந்தைகள் கூட வீடுகளுக்குள் பாதுகாப்பாக இல்லை” என்று கூறினார்.

Tags :
Advertisement