For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை!” - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

08:57 PM Apr 10, 2024 IST | Web Editor
“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை ”   எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
Advertisement

“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை”  என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார். 

Advertisement

பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

“அதிமுக பிரிந்து இருக்கிறது என்று கூறுகிற முதலமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சி கூட்டத்தில் வந்து பாருங்கள். அதிமுகவை உடைக்க நினைத்த உங்களின் கனவு  தூள்தூளாக உடைக்கபட்டது. பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார் ஒருவர். விமானத்தில் ஏறும்போது பேட்டி, இறங்கும்போது பேட்டி.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மேடையில் நின்று பேசுகிறேன்.  3 ஆண்டுகள் திமுக அரசு செய்த சாதனைகளை பேச தயாரா?. திமுக என்பது கட்சி அல்ல. கார்ப்பரேட் நிறுவனம். குடும்ப அரசியல் நடத்தி வருகின்றனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது.

அமைச்சர் உதயநிதி தன்னுடைய பிரசாரத்தில் ஒற்றை செங்கலைக் காட்டி எந்த பயனும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்தியில் சென்று பேசாமல் ஒற்றை செங்கலைக் காட்டுகிறார். திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கை மு.க. ஸ்டாலின் இழந்துவிட்டார். தேங்காய் நார் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை அதிமுக வெற்றி பெற்றால் நிறைவேற்றும்.

மத்தியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள், அதனால் என்ன பயன்? மத்தியில் இருந்து வருபவர்கள் தமிழ்நாட்டிற்கு ஏதாவது திட்டங்களை கொடுத்தார்களா? ஏதேதோ பேசி மக்களை குழப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள். அது நடக்காது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை பாஜகவால் நிறைவேற்ற முடியாது. ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டத்தை மாநில அரசுகளால் தான் நிறைவேற்ற முடியும்.

மேகதாது அணை விவகாரத்தில் அண்ணாமலை வாய் திறக்காதது ஏன்? மேகதாது விவகாரத்தில் தேர்தலுக்காக, சட்டத்தை மதிக்காமல் பாஜக செயல்படுகிறது" என தெரிவித்தார்.

Tags :
Advertisement