"அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது" - ஜி.கே வாசன் பேட்டி!
புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அடுத்த வருடம் தேர்தலை சந்திப்பதில் முதல் அணியாக இன்றைக்கு இருப்பது தான் உண்மை நிலை. இன்னும் சில மாதங்களிலே இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்த கூட்டணி வெல்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்தும். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இயக்கங்கள் சார்பில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விவசாயம் சார்ந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.
எவ்வளவு அணிகள் வேண்டுமானாலும் களத்தில் நிற்கலாம், ஆனால் இன்றைய தினம் முதல் அணியாக அதிமுக கூட்டணி, பாஜக, தமாகா மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகள் களத்தில் நிற்கிறது. மக்களுடைய எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலித்து வருவது தான் உண்மை நிலை என்று தெரிவித்துள்ளார்.