For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி தமிழ் நாட்டில் சர்ச்சையை உண்டாக்கிய கிங்டம் படம் வெளியான  தருமபுரி திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்.
07:27 PM Aug 10, 2025 IST | Web Editor
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி தமிழ் நாட்டில் சர்ச்சையை உண்டாக்கிய கிங்டம் படம் வெளியான  தருமபுரி திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்.
’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான  திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’
Advertisement

டோலிவுட் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த  ஜூலை 31ல் திரையரங்கில் வெளியான படம் ‘கிங்டம்.  இப்படத்தில் விஜய் தேவரகொண்டா பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கு, தமிழ்,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் கதை இலங்கையை அடிப்படியாக கொண்டு  அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில்  இப்படத்தில் இலங்கை தமிழர்களை மிகத் தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சியமைப்புகள் இடம் பெற்றிருப்பதாக நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம்  தெரிவித்திருந்தார். மேலும் கிங்டம் படம் வெளியாகிய சில  திரைங்குகளை நாதகவினர் முற்றுகையிட்டனர்.

Advertisement

இந்த நிலையில், கடந்த 5 ந் தேதி தருமபுரி டி மேக்ஸ் மல்டிபிலக்ஸ் திரையரங்கம் மற்றும் சந்தோஷ் திரையரங்கத்தில் கிங்டம் திரைப்படம் திரையிடப்படுவதாக பேனர்கள் வைக்கப்பட்டது. இதனை அறிந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஸ்குமார் தலைமையில் 50
க்கும் மேற்பட்டோர் திரையரங்கு முன்பு ஒன்று திரண்டு படத்தை திரையிடக்கூடாது என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று திரையரங்கில் இத்திரைப்படம் ஒளிபரப்பட்டு ஓடக்கொண்டிருந்தது. அதனை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டனர்.  தொடர்நது தியேட்டர் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் திரையரங்கிற்குள் நுழைந்து முழுக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி அனைவரையும் திரையரங்கிற்குள் இருந்து அழைத்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் வாக்கு வாதம் எற்பட்டது. தொடர்ந்து கிங்டம் திரைப்படம் தியேட்டரில் ஒளிப்பரப்பமாட்டது என திரையரங்கு நிர்வாகம் அறிப்பை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
Advertisement