நாடாளுமன்றம் அருகே தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நாடாளுமன்றம் முன்பு தனக்கு தானே தீ வைத்து கொண்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்திர பிரதேச மாநிலம் பக்பத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா (வயது 26). இவர் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே பெட்ரோல் போன்ற பொருட்களை தனது உடலின் மேல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வீரார்கள் தீயை அணைத்தனர்.
தீயை அணைத்த அதிகாரிகள் அவரை மீட்டு ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அவர் உடலில் 95 சதவீத தீ காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாக்பத்தில் சில நபர்களுடன் நடந்த தகராறு காரணமாகவும், அவரது குடும்பத்தார்களை சிலர் தாக்கிய சம்பவம் காரணமாகவும் மன அழுத்ததில் இருந்த அவர் தீ குளித்ததாக தெரிகியது. இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (டிச-27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.