For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி - குவியும் பாராட்டு..!

11:48 AM Jan 27, 2024 IST | Web Editor
சாலையில் கிடந்த ரூ 3 லட்சம் மதிப்பிலான தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளி   குவியும் பாராட்டு
Advertisement

சாலையில் கிடந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப்படைத்த கூலித் தொழிலாளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கமலநாதன்(35). சென்னை காவல்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருபவர் கமலநாதனின் மனைவி நிஷாந்தி(30). இவர்களின் மகன் வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். மகனை பள்ளிக்கு கூட்டிச்செல்லும் பொழுது நிஷாந்தியின் 4.1/2 சவரன் தங்க தாலி சங்கிலி சாலையில் விழுந்துள்ளது. இதை அறியாத நிஷாந்தி வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது தாலி சங்கிலி இல்லை என்பதை உணர்ந்த நிஷாந்தி அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். பின்பு பள்ளி வரை சென்று பார்த்துள்ளார். ஆனால், தங்கச் சங்கிலி கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்த வழியாக சென்ற முருகன் என்ற கூலி தொழிலாளிக்கு அந்த தாலி சங்கிலி கிடைத்துள்ளது. அப்போது, அக்கம்பக்கத்தில் பார்த்தபோது யாரும் இல்லாத காரணத்தால் முருகன் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தன் மனைவியிடம் கூறியுள்ளார். உடனே அதை காவல்துறையில் ஒப்படைக்கும்படி அவரது மனைவி கூறியுள்ளார்.இதனையடுத்து, முருகன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த தாலி சங்கலியை போலீசார் இடத்தில் ஒப்படைதுள்ளார். தாலி சங்கிலியை தொலைத்த மன வருத்தத்தில் இருந்த நிஷாந்தி, தன் கணவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். உடனடியாக அவர்கள் மீஞ்சூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து முருகன் கண்டெடுத்த தாலி சங்கிலி அவர்களுடையது தான் என உறுதி செய்த காவல் ஆய்வாளர் காளிராஜ், தங்கச் சங்கிலியை அவர்களிடம் ஒப்படைத்தார். மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க சங்கிலியை சுயநலனின்றி ஒப்படைத்த கூலித் தொழிலாளி முருகனுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags :
Advertisement