"ஆணவ கொலை நடைபெறுவதற்கு தமிழக அரசு தலை குனிய வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தினம் தினம் போராட்டம் என முதலமைச்சர் தெரிவிக்கிறார். தினம் தினம் போராட்டம் நடத்த மத்திய அரசு என்ன அநீதியை இழக்கிறது. தமிழக மக்கள் அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கும் பாதுகாப்பிற்கும் மருத்துவமனைக்கு செல்வதற்கும் தான் தினம் போராட்டம் இருக்கிறது.
உங்களுடன் ஸ்டாலின் என மருத்துவ முகாம் நடத்துகிறார்கள், ஆனால் மருத்துவமனையில் நிலைமையை அனைத்து பத்திரிகை சுட்டிக்காட்டி இருக்கிறது. அரசின் கட்டமைப்பு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
நான்கு வருடமாக மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது மக்களுக்கு திட்டங்களாக இருக்கட்டும் குறையாக இருக்கட்டும் அனைத்தும் அவசர அவசரமாக தற்போது என்ன செய்யப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார். மத்திய அரசு எல்லா விதத்திலும் தமிழ்நாட்டிற்கு உதவி செய்து கொண்டு தான்
இருக்கின்றது பாரத பிரதமர் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றார்.
மக்களை பார்த்து கவலைப்படாமல் தமிழக அரசு மத்திய அரசை பற்றி குறை சொல்லி கடிதம் எழுதுவது முதலமைச்சருக்கு வழக்கமாக உள்ளது. கலைஞரின் வழியில் என கடிதத்தில் எழுதி இருக்கிறார் கலைஞர் தான் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தார். இன்று கலைஞர் இருந்திருந்தால் பாரதிய ஜனதாவை எதிர்த்துர்பார் என கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்ற மாநிலங்களை பார்த்தவரை பிரதமரை முதலமைச்சர் வரவேற்கிறார் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ஒரு மோதல் போக்கை கடைபிடிப்பது நல்லது இல்லை என முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். ரயில்வே திட்டம் விமான நிலைய விரிவாக்க திட்டம், பூண்டி ஏரியில் ரிசவாய் ஏரியில் உயர்வதற்கு நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
வேளச்சேரியில் குப்பை கிடங்கில் துர்நாற்றம் தென் சென்னையில் குப்பையில் மண்டி கிடைக்கிறது என ஆங்கிலப்பத்திரியில் குறிப்பிட்டார்கள். இதையெல்லாம் கவனிக்காமல் தினமும் ஒரு கடிதம் எழுதுவதில் எந்த ஒரு பயணமும் இல்லை என முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு முன்பு டிரம்ப் சொன்னது போல் பொருளாதாரம் செத்துப் போய்விட்டது என்று சொன்னார், தேர்தல் கமிஷன் செத்துப் போய்விட்டது என்று சொல்கிறார். முதலில் காங்கிரஸ் எங்கு உயிரோடு இருக்குதுன்னு சொல்லட்டும் என ராகுல் காந்திக்கு பதில் அளித்து தெரிவித்தார்.
இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாகவும் 57% மக்கள் மத்திய அரசு திட்டங்களால் பயன் பெற்று இருக்கிறார்கள். 30 கோடி மக்கள் வறுமை கோட்டின் கீழிருந்து மேலே வந்திருக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஓபிஎஸ், நைனார் நாகேந்திரனை தொலைபேசியில் அழைத்ததாக குறிப்பிட்ட கேள்விக்கு, தொடர்பாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை தலைவர்கள் பொய் சொல்வதற்கு வாய்ப்பில்லை. அடுத்து மோதலுக்கு இரண்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்றது.
சுதந்திரத்திற்கு முன்பாக ஆணவக் கொலை நடந்திருப்பதாக கமலஹாசன் தெரிவித்த பதிலுக்கு, திராவிட மாடல் பல ஆண்டுகள் தமிழகத்தை வேண்டும் என சொல்கிறார்கள். அப்போது பெரியாரின் கருத்துகள் இங்கு மக்களிடையே பதிவு இல்லையா அண்ணா கருத்துகள் மக்களிடையே பதிவாகவில்லையா.
ஐந்து முறை ஆட்சி செய்தும் சமூக நீதியை நிலை நாட்ட முடிவில்லையா அப்போது என்ன ஆட்சி செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார், ஆணவக் கொலையை கட்டுப்படுத்த தீவிரமான சட்டம் இல்லாமல், இன்று வரைக்கும் ஆணுவக் கொலை நடக்கின்றது. இதற்கு கனிமொழி மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார், அவருக்கு பதிலடி தரும் வகையில் அப்போது மத்திய அரசிடம் ஆட்சி கொடுத்துவிட்டு செல்லுங்கள் எல்லாத்துக்கும் மத்திய அரசை குறை சொல்வதற்கு என கனிமொழிக்கு பதிலடி கொடுத்தார்.
ஆணவக் கொலை இன்று வரை நடைபெறுவது என்பது தமிழக அரசு தலை குனிய வேண்டும். கமல்ஹாசன் பாராளுமன்ற உறுப்பினர் ஆன பிறகு சுதந்திரத்திற்கு முன்னால் இருந்து ஆணவ கொலை நடைபெற்று வருவதாக கருத்து தெரிவிக்கிறார். இந்த சமூக நீதியை உங்களால் நிலைநாட்ட முடியவில்லை என ஒப்புக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.