For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” - தவெக தலைவர் விஜய்!

வக்ஃபு வாரியம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
04:02 PM Apr 17, 2025 IST | Web Editor
“உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”   தவெக தலைவர் விஜய்
Advertisement

வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மறுவிசாரணை நடைபெறும் வரையில் புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Advertisement

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அவர்களுக்கும், அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement