For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிப்பு!” - தேவநேயன் அரசு குற்றச்சாட்டு

06:09 PM Mar 22, 2024 IST | Web Editor
“அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிப்பு ”   தேவநேயன் அரசு குற்றச்சாட்டு
Advertisement

அதிமுக - வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு, அனைத்து கட்சிகளும் தங்கள் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.  அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  1. ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
  2. மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ. 3,000 வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  3. சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.
  4. நீட் தேர்வுக்கு மாற்றாக 12ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை.
  5. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
  6. குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
  7. தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
  8. தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
  9. சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  10.  பெட்ரோல்,  டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்.
  11. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை தொடர்பாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

அதிமுக-வின் 2024, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையைப் பார்த்தேன். குழந்தை உரிமைகளை முற்றிலும் புறக்கணித்துள்ளனர். குழந்தை நலன், உரிமை மற்றும் பாதுகாப்பு என்ற வார்த்தைகளே தேர்தல் அறிக்கையில் இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், வாக்கு வங்கி இல்லாததால் புறக்கணித்துள்ளார்கள் என நான் எண்ணுகிறேன்.

இது குழந்தைகளுக்கு செய்யும் மிகப் பெரும் அநீதி. குழந்தைகளை புறக்கணிக்கும் அரசியல் செயல்பாடுகளை நாம் புறக்கணிப்போம். இவ்வாறு குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags :
Advertisement