’லாக்டவுன்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைப்பு...!
‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து அவர் மலையாளம் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர், கொடி,டிராகன், பைசன் காளமாடன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அனுபமா பரமேஷ்வரன் தற்போது ‘லாக் டவுன் என்னும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ளார்.
கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து படமானது டிசமபர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
