திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்...!
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் CISF வீரர்களின் பாதுகாப்போடு மனுதாரர் மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து தொடர்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. மேலும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதனை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.
இந்த சூழலில் நேற்று திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்திய சோதனையில் அது புரளி என்று தெரியவந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மலைமேல் உள்ள தர்காவில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.