Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுவதே ராகுல் யாத்திரையின் நோக்கம் - அமித் ஷா!

ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையின்  நோக்கம் ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
06:51 PM Sep 18, 2025 IST | Web Editor
ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையின்  நோக்கம் ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
Advertisement

பீகாரின் பெகுசராய் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பீகாரில் வரும் சட்டமன்றத் தேர்தலில் NDA  மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் அடுத்த முறை தேர்தலில் போட்டியிடத் துணிய மாட்டார் என்றும் கூறினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், ”காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு முறையும் தவறான கதையை பரப்புகிறார்கள். ராகுல் காந்தி பீகாரில் ஒரு யாத்திரை மேற்கொண்டார். அந்த யாத்திரையின்  நோக்கம் மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்காது அல்ல. வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதுதான் அதன் நோக்கம்.

ராகுல் காந்தியும் அவரது கட்சியும் நமது இளைஞர்களுக்காக அல்லாமல், வாக்கு வங்கி ஊடுருவல்காரர்களுக்காக வேலை வாய்ப்பை வழங்குகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வைப் பரப்புமாறு பாஜக தொழிலாளர்களை அவர் வலியுறுத்தினார். தவறுதலாகக் கூடக் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பிகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்கார்கள் மட்டுமே இருப்பார்கள் என்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சொல்ல வேண்டியது நமது பொறுப்பு” என்று அவர் கூறினார்.

 

Tags :
amithshabiharelectionCongresslatestNewsndaRahulGandhi
Advertisement
Next Article