Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மது போதையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது!

ஒடிசாவில் மது போதையில் தம்பியே தனது அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
05:41 PM Jan 10, 2025 IST | Web Editor
Advertisement

ஒடிசாவில் மது போதையில் தம்பியே தனது அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

ஒடிசா மாநிலம் ஹிந்தோல் பகுதியை சேர்ந்தவர் சுனந்தா நாயக். இதனால் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் வழக்கம் போல் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி இரவு குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். இதற்காக அவரது அண்னன் சுனந்தா நாயக்கை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் அண்ணன் - தம்பி இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் சுனந்தா நாயக் தனது அண்ணனை கூர்மையான ஆயுதத்தை எடுத்து குத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலால் படுகாயமடைந்த அவரது அண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

சத்தம் கேட்ட ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றளனர். அவரது உடல் நிலை மோசமான காரணத்தால் அவரை அங்கிருந்து தென்கனால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கொலை செய்த அவரது சகோதரனை போலீசார் நேற்று (ஜனவரி 8) கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags :
ArrestDrugsMurderPoliceUttarakhand
Advertisement
Next Article