For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்திய மெட்ரோ ரயில் என மேற்கு வங்க பாஜக பரப்பிய படங்கள் பொய் - உண்மை என்ன?

02:01 PM May 19, 2024 IST | Web Editor
இந்திய மெட்ரோ ரயில் என மேற்கு வங்க பாஜக பரப்பிய படங்கள் பொய்   உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by  Newschecker

Advertisement

இந்தியாவின் மெட்ரோ ரயில் நிலையை சேவையை பிரதமர் மோடி மேம்படுத்தியுள்ளதாக கூறி மேற்கு வங்க பாஜக சார்பில் ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவியது. அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் செக்கர் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்.

பாஜக விளம்பரத்தில் இடம்பெற்றிருப்பது இந்தியா மெட்ரோ ரயிலா?

இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக செய்து வருகின்றன.  பல அரசியல் கட்சிகள் தங்களது சாதனைகளை விளக்கி போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள், அறிக்கைகள் அடங்கிய ஏடுகள் ஆகியவற்றை பொது மக்களுக்கு விநியோகித்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு வங்க பாஜக சார்பில் ஒரு போஸ்டர் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அதன்படி இந்தியாவின் மெட்ரோ ரயில் நிலையை சேவையை பிரதமர் மோடி மேம்படுத்தியுள்ளதாக கூறி ஒரு போஸ்டரை மேற்கு வங்க பாஜக வெளியிட்டது.  அந்த போஸ்டரில் வித்தியாசமான வகையில் ஒரு மெட்ரோ ரயில் படமும், வழித்தடங்களும் இடம்பெற்றிருந்தது. இந்த படங்கள் தற்போது சர்ச்சையாகி வருகின்றன

போஸ்டரில் இடம்பெற்ற படம் இந்திய மெட்ரோ ரயில் படமா?

மேற்கு வங்க பாஜக வெளியிட்ட பதிவின் கீழே பல பயனர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர்.  அதில் போஸ்டரில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் நம் நாட்டில் உள்ள மெட்ரோ ரயில் மற்றும் அதன் வழித்தடமோ அல்ல.  மாறாக சிங்கப்பூரில் உள்ளது எனக் சுட்டிக்காட்டினர். இதனை நியூஸ் செக்கர் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் கவனத்தில் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியது.

அதன் படி நியூஸ் செக்கர் நிறுவனம் அப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தது. இதன் முடிவில் இப்படம் பிப்ரவரி 13, 2020 தேதியிட்ட சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என்கிற சிங்கப்பூர் செய்தி நிறுவனம் "பயணிகள்" என்ற தலைப்புடன் ரயிலின் இதே  படத்தை பதிப்பிட்டுள்ளது. இந்த கட்டுரையில் சிங்கப்பூரில் உள்ல சோவா சூ காங் எம் ஆர்டி மற்றும் ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பயணம் குறித்து அந்த கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்  இது தொடர்புடைய முக்கிய தேடலில்  "NS1 EW24 Jurong East MRT" என்ற தலைப்புடன் விக்கிமீடியா காமன்ஸ் என்கிற இணையதளத்தில் இதே செய்தி வெளியிடப்பட்டிருந்தது.  இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தில் அவை இரண்டும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்த முடியும்.  ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையம், சிங்கப்பூரின் ஜூரோங் ஈஸ்டில் உள்ள ஒரு  முக்கிய மெட்ரோ ரயில் நிலையமாகும். இது சிங்கப்பூரின் ரயில் ஆபரேட்டரான SMRT ரயில்கள் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது.

முடிவு

இதன்  மூலம் இந்திய மெட்ரோ ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களை பிரதமர் மோடி மேம்படுத்தினார் எனக் கூறும் மேற்கு வங்க பாஜகவின் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள படங்கள் போலியானது என்றும் அவை சிங்கப்பூர் நாட்டில் உள்ள உள்ள மெட்ரோ ரயிலின் படங்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

This story was originally published by  Newschecker and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement