Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வயநாட்டு மக்கள் அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என கற்றுக் கொடுத்துள்ளனர்" - #RahulGandhi பேச்சு!

05:20 PM Nov 11, 2024 IST | Web Editor
Advertisement

வயநாட்டு மக்கள் தனக்கு அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என்பதை கற்றுக் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

வயநாடு மக்களவை இடைத்தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தனது சகோதரியும், காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தியை ஆதரித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ரோட் ஷோ நடத்தினார். பிரியங்கா காந்தியும் இதில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி,

“வயநாட்டுக்கு வருவது எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வழக்கமான அரசியல் பிரசாரம் அல்ல. வேட்பாளராக அல்லாமல், பிரசாரம் செய்பவராக நான் இங்கு வந்துள்ளேன். வயநாடு தொகுதி மக்களின் அதிகாரப்பூர்வமற்ற எம்.பி.யாக இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். இங்கு இருக்கும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றும் தருணம் உண்டு. என்னைப் பொறுத்தவரை அது இந்திய ஒற்றுமை யாத்திரை. அந்தப் பயணம் அனைத்து மக்களிடமும் ஒற்றுமை மற்றும் மரியாதைக்கான அழைப்பை விடுத்தது.

அன்பு என்ற சொல் அரசியலில் தவிர்க்கப்படுகிறது. வயநாட்டில் கிடைத்த அனுபவம் அதன் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இங்கு நான் பெற்ற அன்பு அரசியலுக்கான எனது அணுகுமுறையை மாற்றிவிட்டது. உண்மையில், வெறுப்பு மற்றும் கோபத்திற்கான ஒரே மருந்து அன்பு என்று நான் நம்புகிறேன். அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என்பதை வயநாட்டு மக்கள் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு பெரிய இடத்தை வயநாடு என் இதயத்தில் வைத்திருக்கிறது. இங்குள்ள அனைவருக்கும் எந்த நேரத்திலும் உதவ நான் இருக்கிறேன்.

வயநாட்டை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுமாறு எனது சகோதரிக்கு சவால் விட விரும்புகிறேன். கேரளாவைப் பற்றி நினைக்கும் எவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது வயநாடாக இருக்க வேண்டும். இது வயநாட்டு மக்களுக்கும் அதன் பொருளாதாரத்துக்கும் பயனளிக்கும். மேலும், வயநாட்டின் அழகை உலகம் அறியும். நான் காட்டிய அதே அரவணைப்பு மற்றும் அக்கறையை எனது சகோதரியும் காட்டுவார் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

Tags :
CongressINCKeralaNews7Tamilpriyanka gandhiWayanad
Advertisement
Next Article