"தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள்" - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தேசிய கல்விக் கொள்கை மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மூன்று மொழிகளில் இந்தியும் ஒன்று என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு கைப்பிடி சோற்றில் முழு பூசணிக்காய் மறைப்பது தான் அவருடைய கருத்து. ஹிந்தியை எங்கும் நாங்கள் திணிக்கவில்லை என வானதி சீனிவாசன் கருத்திற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
எங்கு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அங்கு அமித்ஷாவும், பிரதமரும் செல்வது வாடிக்கை. அவர்களின் அயராத உழைப்பு பாராட்டத்தக்கது. ஆனால் அது தமிழ்நாட்டில் எடுபடாது. பாஜக என்ன முயற்சி எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மதவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை அன்புமணி கூறிய கருத்திற்கு, இது அவரின் கோரிக்கை, தன்னுடைய தலைமையை நிறுவுவதற்கான பெரும் முயற்சியை எடுத்து வருகிறார்.
பாமகவில் நிலவி வரும் உட்கட்சி குழப்பங்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியிலும் அவர் ஈடுபடுகிறார். வன்னியர்களின் சமூக நீதிக்காக குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நல கூட்டணி போன்ற அமைவதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு அரசுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் காவல்துறையின் மீது கடும் நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும். இதுபோன்ற அதிகார அத்துமிரல்களை இரும்பு கரம் கொண்டு நசுக்க வேண்டும்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும், அண்ணாவையும் கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோ ஒளிபரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுவாக அனைவரின் கருத்து, அந்த
வகையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.