“அண்ணாமலை கொடுத்த பேனா...” - சென்டிமென்ட்டாக பேசிய நயினார் நாகேந்திரன்!
புதிய பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, ஒருமனதாக போட்டியின்றி இன்று(ஏப்ரல்.11) பாஜக மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “நான் இன்றைக்கு விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன் நாளைக்குத்தான் இறுதி முடிவு தருவார்கள். வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்களா என்று தெரியவில்லை. எடப்பாடி செய்தது துரோகம் என கனிமொழி எம்.பி பேசியதன் காரணம் அவர் எதிர்கட்சி அப்படித்தான் பேசுவார். எங்கள் ஆட்கள் அப்படி யாராவது பேசியுள்ளார்களா? அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வதும் பிரிவதும் இன்றைக்கு நேற்று நடப்பது அல்ல. ஒரு காரணத்திற்காக பிரிந்திருக்கலாம். வெறொரு காரணத்திற்காக இன்றைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவர் கூட்டணியில் சேர்ந்துள்ளார்.
ஒபிஎஸ், டிடிவி-யை ஆகியோர் மத்திய அமைச்சரை சந்திக்காதது என்பது இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ளதால்தான். நல்ல பருவ சூழ்நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும். மாநில தலைவராக என்னுடைய செயல்பாடுகளை நீங்கள்தான் கூற வேண்டும். அண்ணாமலை கொடுத்த பேனா தான் இது. இதை வைத்துதான் கையெழுத்து போட சொன்னார். இது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.
அவர் காலத்தில் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியடைந்தது. அதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் அவரின் உதவியோடு மிகப்பெரிய வளர்ச்சியடையும். அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.1998ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். அப்போது பெரும்பான்மையை பெற்றோம். அதே போல் இப்போது மீண்டும் அதிமுகவுடன் பாஜக கை கோர்த்திருக்கிறது மிகப்பெரிய வெற்றியை பெரும்”