For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன!” - செல்லூர் ராஜூ பேட்டி!

03:25 PM Feb 25, 2024 IST | Web Editor
“திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன ”   செல்லூர் ராஜூ பேட்டி
Advertisement

திமுகவுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிகளே, அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில், 

போருக்கு தயாராக உள்ளது போல அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது. மன்னர் படை வீரர்களை தயார் செய்வது போல அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி தயார் செய்துள்ளார். தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப்பணி செய்ய அதிமுக தயாராக உள்ளது. அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவைப்படுகிறது. அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுகளால் இஸ்லாமிய மக்களிடம் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

மோடியா? எடப்பாடியா? என்கிற நிலைப்பாடு எங்களிடம் இல்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொம்மை போல காட்சி அளிக்கிறார்கள். அதுபோல அல்லாமல் வெற்றி பெறும் அதிமுக உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பார்கள். தேர்தலில் கூட இருக்கும் வரை தான் நண்பர்கள். வெளியே போய் விட்டால் அவர்கள் எங்களுக்கு எதிரியே. தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு பாதிப்புகள் வரும் என எண்ணியே சட்டமன்றத்தில் துணை தலைவர் இருக்கை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தலைவர் போல பேசுவதில்லை. அவர் மேடைப் பேச்சாளர் போல பேசி வருகிறார். அதிமுகவில் எம்எல்ஏவாக பதவி வகித்து, பக்கத்து வீட்டுகாரருக்கே தெரியாதவர்களை பாஜகவில் சேர்த்துக் கொண்டுள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் உதிர்ந்த இலை. அவர்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.

அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார். கூட்டணிக்கு முழு அதிகாரமும் அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எடுக்கும் முடிவுக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள். திமுகவுடன் கூட்டணியில் இருக்கிற கட்சிகளே, அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என தெரிவித்தார்.

Tags :
Advertisement