For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் - தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் போட்டியிடுவார் என தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
03:43 PM Jul 04, 2025 IST | Web Editor
2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் போட்டியிடுவார் என தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்   தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றனர். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்று செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

தவெக தலைமையில்தான் கூட்டணி, கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர், தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பார்க்கலாம்.

தீர்மானம் 1

பரந்தூர் மக்கள் உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும்.

தீர்மானம் 2

கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.

தீர்மானம் 3

விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம். மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

தீர்மானம் 4

நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

தீர்மானம் 5

பெரும் நட்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை.

தீர்மானம் 6

மலைக்கோட்டை மாநகரில் நடக்கும் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்

தீர்மானம் 7

என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வலியுறுத்தி தீர்மானம்.

தீர்மானம் 8

விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கைகளை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக்கோரி தீர்மானம்.

தீர்மானம் 9

திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்கக் கோரும் தீர்மானம்.

தீர்மானம் 10

தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.

தீர்மானம் 11

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு.

தீர்மானம் 12

அரசு மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தீர்மானம் 13

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும்.

தீர்மானம் 14

இருமொழிக் கொள்கை தீர்மானம்.

தீர்மானம் 15

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் [SIR] நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தீர்மானம் 16

கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம்.

தீர்மானம் 17

தவெக-விற்கு எதிரான திமுக அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்.

தீர்மானம் 18

தொகுதி மறுசீராய்வு - ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்.

தீர்மானம் 19

காவல் துறை விசாரணையின் போது தொடர்ந்து பலர் கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்.

தீர்மானம் 20

பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பாஜகவின் பிளவுவாத அரசியலைக் கண்டிக்கும் தீர்மானம்.

Tags :
Advertisement