கை இழந்த பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்‘கை’!
டெல்லியில், ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த பெயிண்டருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகளை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…
1994-ஆம் ஆண்டு திரைக்கு வந்த டூயட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளை கேட்காத இசைப்பிரியர்களே இல்லை என்றே சொல்லலாம்.
இந்த வரிகளுக்கு ஒத்தார்போல் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்து ஒன்று டெல்லியை சேர்ந்த 45 வயதுடைய பெயிண்டர் ஒருவரின் கைகளை இரக்கமின்றி காவு வாங்கிவிட்டது. பெயிண்டர் தொழிலுக்கு கைகளே பிரதானம் என்பதால், கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து, வேறு எந்த வேலையும் செய்ய இயலாமல் அவர் முடங்கி கிடந்தார்.
மேலும், மீனா மேத்தாவின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கார்னியா ஆகிய உறுப்புகள் மற்ற 3 பேருக்கு வாழ்வளித்துள்ளது. இதன் மூலம் மீனா மேத்தா 4 பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளார்.
இதில், பெயிண்டருக்கு இரு கைகளை பொருத்த மருத்துவ குழுவினர் மிகவும் கடினமான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தமனி, தசை, தசை நாண்கள் மற்றும் நரம்புகளை இணைக்கும் சவாலான சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.