Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஆதிதிராவிட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது" - நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் டெய்லி போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிசித்துள்ளார்.
01:37 PM Jun 28, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் டெய்லி போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிசித்துள்ளார்.
Advertisement

திருநெல்வேலியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "செல்வப் பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த விவகாரம் குறித்த கேள்வி, "முதலமைச்சர் சொல்லி தான் போய் பார்த்தாரா தனிப்பட்ட முறையில் பார்த்தாரா என்று யூகம் அடிப்படையில் சொல்ல முடியாது. ஒரு அரசியல் கட்சித் தலைவர், அரசியல் இல்லாமல் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பிற்காலத்தில் அரசியல் ஆக வரும், வராமல் இருக்கலாம்,

Advertisement

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதா என்ற கேள்விக்கு, பாஜகவின் அகில இந்திய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டி உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரால் மற்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் மாநில நிர்வாகிகள் தொடர்பான பட்டியல் மேல் இடத்தில் கொடுத்திருக்கிறோம், வெகுவிரைவில் அறிவிப்பார்கள். ஆதி திராவிட பள்ளிகளில் படிக்கும் பள்ளிக் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆசிரியர்கள் 20% இல்லாத நிலை உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை எல்லாம் செய்ததாக கூறுகிறார்கள். ஆதிதிராவிட பள்ளிகளிலே ஆசிரியர்கள் இல்லை என்றால் மற்ற பள்ளியை எப்படி கவனிக்க போகிறார்கள். அதிமுக கூட்டணியில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு, எங்களை பொறுத்தவரை மாறுதல் வேண்டும், ஒவ்வொரு மனதிலும் மனமாற்றம் ஏற்பட வேண்டும், கூட்டணியில் உள்ளவர்களுக்கும் மன மாற்றம் வர வேண்டும்.

தினசரி தமிழகத்தில் பாலியல் பலாத்காரம் தான் நடைபெறுகிறது. இதுதான் ஆன்மீக அரசியலா? தமிழகத்தில் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் டெய்லி போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண் பெட்டிஷன் கொடுக்கச் சென்றால் கால் வைத்து இருக்கிறார்கள். இதுதான் ஆன்மீகம் கலந்த அரசியலா? என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Adi Dravidian schoolsAnnamalaiBJPDMKnainar nagendranPressMeetTamilNaduthirunelveli
Advertisement
Next Article