For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ரோபோ சங்கர் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு" - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
08:01 AM Sep 19, 2025 IST | Web Editor
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 ரோபோ சங்கர் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு    எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Advertisement

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ ஷங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

Advertisement

சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கர் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement