தூர்தர்ஷனில் 'தி கேரளா ஸ்டோரி': கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள்!
நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் விஷம செயல்திட்டத்தின் ஒரு பகுதி தான் தூர்தர்ஷன் டிவி சேனலில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்புவது என கேரள எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் தெரிவித்துள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மதம் மாறி பின்னர் தீவிரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படம் தவறான செய்தியை சித்தரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இப்படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் போராட்டங்களுக்கு இடையே, படத்தின் வெளியீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையிடவில்லை.
இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று (ஏப்ரல் 5) தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிளவுபடுத்தும் கருத்துகளை கொண்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை ஒளிபரப்ப 'டிடி நேஷனல்' எடுத்த முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது.
The decision by @DDNational to broadcast the film 'Kerala Story', which incites polarisation, is highly condemnable. The national news broadcaster should not become a propaganda machine of the BJP-RSS combine and withdraw from screening a film that only seeks to exacerbate…
— Pinarayi Vijayan (@pinarayivijayan) April 4, 2024