”கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே”- செல்வபெருந்தகை பதிவு
கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே என தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை பதிவிட்டுள்ளார்.
10:40 AM Aug 07, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே என்று தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
”கலைஞர் அவர்கள் மறைந்தும் நிறைந்தும் ஏழ ஆண்டுகள் கடந்துவிட்டது என்பது ஆகஸ்ட் 7 ஆம் நாள் நினைவுக்கு வருகிறதே தவிர மற்ற நாட்களில் எல்லாம் அவர் இருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற நினைவே இருக்கிறது. அவர் விட்டு சென்ற இடத்தை அனைத்து வகையிலும நிரப்பக் கூடியவராக தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். கலைஞர் என்பவர் 1924 ஆம் ஆண்டு பிறந்து 2018 ஆம் ஆண்டில் நிறைவுற்றவர் என்பதல்ல அவரது வரலாறு. வெறும் எண்ணால் தீர்மானிக்கப்பட்டதல்ல அவரது வாழ்க்கை. தமிழ்நாடு உயர்வடைய அவருடைய எண்ணங்களால் தீர்மானிக்கப்பட்டது அவருடைய வாழ்க்கை. ஹரிநாராயண்டாகுர் என்கிற ஆய்வாளர் இந்தியில் எழுதிய கட்டுரையில், 'ராம்மனோகர் லோகியாவுக்குப் பிறகு தெற்கில் கலைஞர் கருணாநிதியும். வடக்கில் கர்பூரி தாகூரும் சமுதாய நலன் சார்ந்தவர்களாக இருந்தார்கள்' என்று குறிப்பிட்டார். கலைஞர் தனது வாழ்நாளில் அடையாத பெருமையை இப்போது நித்தமும் அடைந்து வருகிறார். அத்தகைய பெரும்புகழை நித்தமும் பெற்றுத்தந்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள். கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே. கலைஞர் இருக்கிறார் என்பதைப் போலவே காலம் நகர்ந்து செல்கிறது! இன்று ஆகஸ்ட் 7 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுநாள். தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவைப் போற்றுவோம்”
என்று தெரிவித்துள்ளார்.
Advertisement