“சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்ததடுத்த நாட்களுக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்து தந்துள்ளது!” - முதலமைச்சர் #MKStalin
சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்ததடுத்த நாட்களுக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்து தந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், முதல் நாளான இன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது தொடர்பாக தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதில்,
சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ரூ.900 கோடிக்கும் அதிகமான பாதுகாப்பான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பல துறைகளில் 4,100 புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளது.
🔹 நோக்கியா - ₹450 கோடி, 100 வேலை வாய்ப்புகள்
🔹 பேபால் - 1,000 வேலைகள்
🔹 ஈல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் - ₹150 கோடி, 300 வேலைகள்
🔹 மைக்ரோசிப் - ₹250 கோடி, 1,500 வேலைகள்
🔹 Infinx - ₹50 கோடி, 700 வேலைகள்
🔹 அப்ளைடு மெட்டீரியல்ஸ் - 500 வேலைகள்
அமெரிக்காவில் இன்னும் இரண்டு வாரங்கள் தங்கி முதலீடுகளை ஈர்க்க உள்ள நிலையில், இந்த வேகத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
The first day in San Francisco has set a promising tone for the days to follow!
Secured investments exceeding ₹900 crores at Chennai, Coimbatore, Madurai, and Chengalpattu, paving the way for 4,100 new jobs in multiple sectors!
🔹 Nokia - ₹450 crore, 100 jobs
🔹 PayPal -… pic.twitter.com/1q6sH7Qgjb— M.K.Stalin (@mkstalin) August 30, 2024