Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“காங்கிரஸ் கட்சியின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது!” - பிரதமர் நரேந்திர மோடி

08:07 PM Feb 05, 2024 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை எனவும் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 5) தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று (பிப்.5) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம்; ஒரே குடும்பம் ஆட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். ஒருசிலரின் முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது காங்கிரஸ். ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியில் ஒருவர்மீது ஒருவருக்கே நம்பிக்கையில்லை. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் தலைமையின் மீது நம்பிக்கையில்லை. பாஜக ஆட்சியில் சாலையோர நடைபாதை வியாபாரிகள் வங்கிக்கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

ஏழைகளுக்கு தேவையான வாய்ப்புகள், தொழிலுக்கான வழிவகையை செய்துகொடுத்தாலே நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும். நாட்டின் எல்லைப்பகுதி வரை அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளன.

Tags :
BJPCongressElection2024IndiaNarendra modinews7 tamilNews7 Tamil UpdatesparlimentPMO Indiaspeech
Advertisement
Next Article