"தொழில் வளர்ச்சியில் மைனஸ் 58% நிலைமைக்கு கொண்டு வந்தது தான் திமுகவின் சாதனை" - அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி "உரிமை மீட்க தலைமுறை காக்க" சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவருக்கு சீதாராம் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒசூர் ராம்நகரில் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் பேசினார். அப்போது, "கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக நான் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
2019ல் 40க்கு 39 தொகுதிகளில் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தீர்கள். 2024ல் 40க்கு 40 தொகுதிகளை திமுகவிற்கு வெற்றி பெறச் செய்தீர்கள். அதேபோல் சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவை வெற்றி பெறச் செய்தீர்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் கள்ளச்சாராயமும் கஞ்சாவும் அதிகரித்து விட்டது.
வேற எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சூழ்நிலை கிடையாது. பஞ்சாப்பை விட அதிகமாக தமிழகத்தில் கஞ்சா விற்பனை உள்ளது என்னிடம் ஆறு மாதங்கள் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கர்நாடகாவில் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி சமூக நீதியை நிலை நிறுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் 4000 பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடும் நிலையில் தமிழக அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளை 75 சதவீதம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை நிறைவேற்ற தவறிவிட்டது திமுக. இந்தியா சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளில் முதல் முறையாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் -58% தொழில் வளர்ச்சியில் கொண்டு வந்தது தான் ஸ்டாலின் செய்த சாதனை
விவசாயத்தையும் மைனஸில் கொண்டு வந்தது தான் சாதனை என குற்றம்சாட்டியுள்ளார்.