இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கியதே திமுக ஆட்சியின் சாதனை - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல்லில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பரப்புரை மேற்கொண்டுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி அருகே எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அவர் பேசியது,
"திமுக ஆட்சியில் 100% சொத்து வரி உயர்வு. குப்பைக்கு வரி போட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். இவ்வளவு வரி வசூல் செய்தும் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 4 இலட்சத்து 38 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.டாஸ்மாக் துறையில் 40,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. நீவாழ்வா சாவா என்ற எண்ணத்தில் மக்கள் இந்த ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை இல்லை. இந்த ஆட்சியில் திட்டங்கள் இல்லை, கடன் தான். இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கி சாதனை படைத்த ஆட்சி திமுக ஆட்சி. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகளவு கல்லூரிகளை ஏற்படுத்தி அதிமுக மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. இப்படி ஒரு சாதனையாவது திமுக ஆட்சியில் சொல்ல முடியுமா? திமுக ஒரு கட்சி இல்லை அது கார்ப்பரேட் கம்பெனி. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும். இது திமுக கட்சியில் நடக்குமா ? அதிமுக ஜனநாயக கட்சி. திமுகவை பொருத்தவரை அது குடும்பக் கட்சி.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம் நடத்தினோம். நடமாடும் மருத்துவ குழு இருந்தது. அதிமுக ஆட்சியில் கையில்லாதவர்க்கு இரண்டு கைகளையும் பொருத்தி அறுவைசிகிச்சை செய்து சாதனை படைத்தது. அவர் திண்டுகல்லை சேர்ந்தவர். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. அது ஸ்டாலினுக்கு பொறுக்காமல் நிறுத்தப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்த உடன் லேப்டாப் திட்டம் கொண்டுவரப்படும். திமுக பாஜக கூட்டணி வைக்கும் போது ஏதும் தெரியவில்லை. அதிமுக பாஜக கூட்டணி வைத்தவுடன் திமுக தற்போது விமர்சித்து பேசி வருகிறது. திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது” என்று பேசி முடித்தார்.