Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மக்களிடம் ஏமாற்று நாடகத்தை திமுக அரசு நடத்திக்கொண்டிருக்கிறது” - வானதி சீனிவாசன் பேட்டி..

03:01 PM Dec 10, 2023 IST | Web Editor
Advertisement

மாற்றி மாற்றி பேசி, மக்களிடம் ஏமாற்று நாடகத்தை திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் மிக்ஜாம் புயல் அனைத்து மக்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்நிகழ்வுகள் குறித்து அவர் பேசியதாவது:

“கடந்த இரு தினங்களாக காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 300 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பணத்தை எண்ணும் மெசின்களே உடையும் நிலையில் உள்ளது. வருமான வரித்துறை அல்லது அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றபட்ட பணம் தொடர்பாக, விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.

இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக இந்தியா கூட்டணியிலிருந்து ஒருவரும் பேசவில்லை. எதற்காக இவ்வளவு பணம் அங்கு வைக்கப்பட்டுள்ளது.? வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை மத்திய அரசு ஏவல்துறையாக வைத்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன. தற்போது கீரை வாங்கும் இடத்தில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை வந்துவிட்டது. அவ்வாறு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கும்போது 100 கோடி ரூபாய் பணத்தை வைத்திருந்த காரணம் என்ன? நமது நாட்டில் எந்த தொழிலை செய்வதற்கும் பாதுகாப்பு இருக்கிறது. அனுமதி இருக்கிறது. நியாயமான வழியில் சம்பாதிக்கலாம்.

எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் மத்திய அரசின் ஏஜென்சிகள் சோதனை செய்ய கூடாது என சொல்கின்றனரா? இந்த மாதிரி சோதனைகள் நடக்கும்போது அவற்றை திசை திருப்ப எதிர்கட்சிகளின் அரசியல் நாடகம் கண்டிக்கத்தக்கது. சென்னையில் மிகப்பெரிய ஏற்பட்டுள்ளது. 98% நிவாரணப் பணிகள் முடிந்திருக்கிறது என அமைச்சர் பேசி இருக்கிறார். மாற்றி மாற்றி பேசி மக்களிடம் ஏமாற்று நாடகத்தை திமுக அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. மழை நீர் வடிகால் பணிகள் நடந்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை தர வேண்டும் என பாஜக கேட்டுள்ளது.

மாநில அரசு நிவாரணத்தொகை 6000 ரூபாயை ரொக்கமாக ரேசன் கடைகளில் கொடுப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக அப்பணத்தை பெண்களின் வங்கி கணக்கில் அரசு வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம். அப்போது தான் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தொந்தரவு இல்லாமல் பணம் மக்களிடம் சேறும். மாநில அரசின் அதிகாரிகள், முன்களபணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், தன்னார்வலர்கள் இவர்களுக்கெல்லாம் என் பாராட்டை தெரிவித்துகொள்கிறேன்.

மழைநீர் பணிகளை மேம்படுத்தவதற்காக ரூ.1000 கோடி வழங்கிய மோடி அரசுக்கு நன்றி. மாநில அரசு ரூ.5000 கோடி கேட்டுள்ளது. மத்திய அரசு அளவீட்டு முறை வைத்திருக்கிறார்கள். அந்த அளவீடு முறை முடிந்து என்ன தொகை கொடுக்க வேண்டுமோ அதை வழங்கும். தேசிய பேரிடர் என்பதற்கான தரவு இருக்கிறது. அவ்வாறு இருந்தால் நிச்சயம் தேசிய பேரிடராக அறிவிப்பார்கள். 2015-ம் ஆண்டு பாதிப்புக்கு பிறகு மழைநீர் வடிகாலுக்கான குழு அமைத்ததற்கு பிறகும் இந்த அளவு வெள்ளம் வந்திருக்கிறது என்றால், அரசு சரியாக செயல்படவில்லை என்றுதான் அர்த்தம்.

மின் கட்டண உயர்வு அனைத்து தொழில்களையும் பாதித்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல், ஆளுங்கட்சி நபர்களின் தொந்தரவு இல்லாமல், நிவாரணத்தொகை வழங்க வேண்டும். கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயி்ல் சேவை விரைவில் வர உள்ளது.” இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPDMKNews7Tamilnews7TamilUpdatesvanathi srinivasan
Advertisement
Next Article