Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்" - நயினார் நாகேந்திரன்!

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
04:32 PM Dec 09, 2025 IST | Web Editor
நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் மூலம் நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர இண்டி கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது!

Advertisement

இந்தக் கூட்டணியின் தலைமையான இந்தியா கூட்டணி அவசரச் சட்டம் மூலம் நமது நாட்டையே இருண்ட காலத்தில் தள்ளி அரசியலமைப்புச் சட்டத்தையே உருக்குலைத்துப் போட்டதை இன்றும் மக்கள் கொடுங்கனவாக எண்ணி நடுங்குகிறார்கள்.

இதே கூட்டணியின் தமிழக முகமான திமுக தான் நூற்றாண்டுக் கோயில்களை இடித்தேன் என்று சொல்பவர்களை மூத்தத் தலைவர்களாகவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் “கறுப்பர் கூட்டங்களைத்” தொண்டர்களாகவும் வைத்திருக்கிறது.

ஆக, ஜனநாயக தேசத்தில் வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச அறிவாலயம் அரசின் முயற்சியை நீதி முறியடித்தது அவர்களுக்குப் பேரிடி தான்! அதனால் தான் இப்பொழுது அந்த நீதிக்கே வாய்ப்பூட்டு போட நினைக்கிறது இந்த மக்கள்-விரோத கும்பல்!

இது அவர்களது அரசியல் பிழைப்பிற்காக இந்திய நாட்டின் ஜனநாயகத் தூணாக விளங்கும் நீதித்துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கும் ஒரு செயலாகும். இதை தேசிய ஜனநாயக் கூட்டணி முறியடிக்கும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BJPCongressDMKjudgeNayinar Nagendran
Advertisement
Next Article